அனைவரும் சேர்ந்து இந்தியாவை வளமானதாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி பேசினார்.
சாலை கட்டுமானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம், இது பொருளாதாரத்துடன் இணைந்துள்ளது. மாநகர போக்குவரத்து நெரிசலையும் இத்திட்டங்கள் குறைக்கும். 31,000 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் அடிக்கல் நட்டப்பட்டு, தொடங்கப்பட்டுள்ளது. சாலை கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சியோடு தொடர்புடையது. சென்னை துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும்.
எதிர்கால தேவைகளை கருத்தில்கொண்டு இரயில் நிலையங்கள் நவீனமயமாக்கல், விவசாயிகளுக்கு மதுரை – தேனி அகல ரயில்பாதை உதவும்.
5 ரயில்வே நிலையங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளது. உள்ளூர் கலை, கலாசாரத்தையும் இது பிரதிபலிக்கும். அதிக அளவிலான சந்தைகளை அணுகுவதற்கும் இது உதவும். பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு உள்பட்டு சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் வீடுகளை கட்டியிருக்கிறோம். ரூ.116 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளையும் பயனாளிகளுக்காக ஒப்படைக்கிறோம். இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக, தென்னந்திய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.
சென்னை துறைமுகத்தை பொருளாதார மையமாக மாற்றும் நோக்கத்தில் இன்று ஒரு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தற்சாற்பு நிலை நோக்கிய நமது உறுதிப்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருக்கும். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை விட சிறப்பான ஒரு வாழ்க்கை தரத்தை உங்கள் குழந்தைகள் வாழ வேண்டும் என்று நீங்கள் ஒவ்வொருவரும் விரும்புவீர்கள்.
தலைச்சிறந்த உள்கட்டமைப்பு
இதற்கு தேவையான ஒன்றுதான் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதி. சிறந்த தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுதான் மத்திய அரசின் சீரிய நோக்கமாகும்.
எந்த நாடுகளெல்லாம் உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்ததோ அந்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையிலிருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தது. நான் உள்கட்டமைப்பு குறித்து பேசும் போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகிறேன். சமூக கட்டமைப்பை மேம்படுத்துவதன் வாயிலாக நம்மால் ஏழைகளின் நலனை உறுதிப்படுத்த முடியும். அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதே இந்த திட்டங்கள் செயப்படுத்தப்படுகின்றன.
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவை அனைத்தும் அனைவரையும் சென்று சேர்வதை நோக்கி நாம் பயணிக்கிறோம். ஒவ்வொரு இல்லத்துக்கும் குடிநீரை கொண்டு செல்ல பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். குழாய் வழி குடிநீர் திட்டம். இதில் கவனம் செலுத்தி வருகிறோம். பாரம்பரியமாக உள்கட்டமைப்பு என்று எது கருதப்படுகிறதோ அதை தாண்டி எங்கள் அரசு செயல்பட்டிருக்கிறது. கட்டமைப்பு என்றால் சாலை, நீர் என்றே கருதப்பட்டன. இன்று நாம் எரிவாயு குழாயையும், அதிவேக இணையத்தையும் நோக்கி நாம் பயணித்து வருகிறோம். இந்த ஆண்டு வரவு-செலவு அறிக்கையின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் மூலதனச் செலவினங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒளி மறைவு இன்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியையும் கலாசாரத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்கு மத்திய அரசு முழு அர்ப்பணிப்போடு இருக்கிறது. செம்மொழி தமிழாய்வுக்கு புதிய வளாகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்துக்கு மத்திய அரசே முழுக்க முழுக்க நிதி வழங்குகிறது. மின்னணு நூலகம், கருத்தரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புகளுக்காக பாரதியாரின் பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தேசியக் கல்வி கொள்கை ஊக்கம் அளிக்கிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது. உண்மையான சுதந்திரத்தை நாம் இப்போதுதான் அனுபவித்து வருகிறோம். நமது நாட்டுக்காக நமது சுதந்திர போராட்ட வீரர்கள் பல கனவுகளை கண்டார்கள். நாம் அதற்காக உழைக்க வேண்டியது நமது கடமை. நாம் அனைவரும் சேர்ந்து இந்தியாவை வளமானதாக மாற்றுவோம். மீண்டும் ஒரு நலத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.








