நீட் விலக்கு விவகாரத்தில் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு முறை அரசியலமைப்பு சட்டப்படி உருவாக்கப்பட்டது அல்ல என தெரிவித்தார். மேலும், நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவக் கனவில் தடுப்பு சுவரை எழுப்புவதாகவும், ஏழை மாணவர்களை கொல்லக்கூடிய தேர்வுதான் நீட் எனவும் கூறினார்.
மாநில அரசுக்கான சட்டம் இயற்றும் அதிகாரத்தின்படிதான் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியதால், மாநிலத்தின் உரிமை கேள்விக்குறியாகி உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு எதிரானது என்பதை விளக்க இவ்வளவு நேரம் வாதிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர்,
அண்மைச் செய்தி: உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை முக்கியம்: பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்
கூட்டாட்சி தத்துவம், தலைகுனிந்து நிற்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பதே ஆளுநரின் கடமை என குறிப்பிட்ட முதலமைச்சர், அமைச்சரவை அறிவுறுத்தினால் அதன்படி ஆளுநர் உடனடியாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








