சிதம்பரம் நடராஜர் கோவில் விகாரத்தை சட்டப்படி சந்திப்போம்- அமைச்சர் சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு 130…

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு 130 கிலோ தங்க பொன் நகைகளை சுத்த தங்க கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்.பி.ஜான் வர்கீஸ், அறநிலைத்துறை ஆணையர்கள், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் இருந்து பக்தர்களிடமிருந்து பெறப்படும் காணிக்கை நகைகள் உரிய முறையில் பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு சொந்தமான மும்பை தங்க உருக்காலையில் தங்கக் கட்டிகளாக மாற்றி வைப்புத் தொகை மூலம் கிடைக்கும் வட்டியில் கோவில் திருப்பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் மேம்பாட்டிற்கு அந்தந்த கோயில்களுக்கு மேற்கொள்ளப்படும்.

இது ஒரு நல்ல திட்டம். பல்வேறு அவமானங்கள் ஏச்சுக்கள், பேச்சுக்கள், அவதூறுகள் எல்லாவற்றையும் கடந்து முதலமைச்சரின் தெளிவான வழிகாட்டுதல் படி
திருக்கோவில்களுக்கு வருமானத்தை ஏற்படுத்துகின்ற இந்த திட்டம் மக்களின்
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து பக்தர்கள் மகிழ்ச்சிக்கு வித்திடும். 15 நாட்களாக தங்கம் பிரித்து எடுக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் தங்கம் சேகரிக்கப்பட்டு பாரத ஸ்டேட் வங்கியிடம் நீதிபதிகள் கண்காணிப்பில் ஒப்படைத்து தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளது.  வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளில் இந்த பணிகள் நடைபெறும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம்.  பெரியபாளையம் உள்ளிட்ட மூன்று கோவில்களில் தங்கத்தேரானது நேர்த்தியாக செய்யப்பட்டு 18 மாதங்களுக்குள் தேர் பவனி நடைபெறும். பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் 125 கோடி ரூபாயில் பல்வேறு திட்டப்பணிகள் துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற நவம்பர் மாதம் சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.