தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறருக்கு அளித்து வாழவைப்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துகளை…

தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு உறுப்பை தானம் செய்வது என்பது ஒரு நபரின் ஒப்புதலுடன், அவரது உறுப்புகளை சட்டப்பூர்வமாக அகற்றி மற்றொரு நபருக்கு இடமாற்றம் செய்ய அனுமதிக்கும் செயல்முறையாகும்.

இந்த உன்னத நிகழ்வில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் ஒரே நோக்கம், விலைமதிப்பில்லாத மனித உயிர்களைக் காப்பாற்றுவதே ஆகும். மரணத்திற்குப் பிறகு உறுப்புகளை தானம் செய்வதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதும், அதை மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும். சிறுநீரகம், இதயம், கணையம், கண்கள் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்பு தானம் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும்.

இந்த நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம்.

தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.