சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவோம் என்று தமிழக சுற்றுலாத் துறைஅமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் “தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022” என்ற நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து பேருந்து மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பயணம் மேற்கொள்ள பிரசித்தி பெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வு நடைபெறுகிறது.
டிஸ்கவர் தமிழ்நாடு இரண்டாம் பதிப்பில் இக்குழுவினர் ஜவ்வாது மலை. ஒகேனக்கல், கொல்லிமலை, பூச்சமருதூர் (கோவை), சேத்துமடை, வால்பாறை, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் துவக்கி வைக்கிறார். அமைச்சர் மதிவேந்தன் மேடை கூறியதாவது:
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கிற 10 நபர்களை அழைத்து நமக்கு தெரியாத சுற்றுலா தளங்களை இவரகள் மூலமாக மக்கள் தெரிந்து கொள்வதற்காக இவர்களை அனுப்பி வைக்கிறோம். 
மேலும் இந்த பிரபலங்களை கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் பின்பற்றி வருகிராகள். பல சுற்றுலாத் துறை இடங்ககளை கண்டறிந்து ஒகேனக்கல், கொல்லிமலை,பிச்சாவரம் போன்ற இடங்களை சிறந்த சுற்றுலா தலங்களாக மாற்றுவோம்.
பல்வேறு அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி சுற்றுலா துறையை மெம்படுத்தி கொண்டு இருக்கிறோம் . மேலும் மேம்படுத்துவோம் என்றார் மதிவேந்தன்.







