முக்கியச் செய்திகள் தமிழகம்

1 முதல் 5-ம் வகுப்பு வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை
நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு & உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பாடம்
நடத்தும் ஆசிரியர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் அக்டோபர் 12-ம்
தேதி வரை பல்வேறு கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆசிரியர்களுக்கான பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு
விடுமுறையும் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல்
9-ம் தேதி வரை விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,
ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக மாணவர்களுக்கு அக்டோபர் 12 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறையை நீட்டிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

அதே வேளையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி
அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகனை கரம் பிடித்த கேரளப் பெண்!

Halley Karthik

பாதுகாப்பான ஷாப்பிங் என்ற பெயரில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு; முதற்கட்ட முடிவுகள் வெளியீடு

G SaravanaKumar

1,288 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி!

Arivazhagan Chinnasamy