முக்கியச் செய்திகள் தமிழகம்

“கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம்” – கமல்ஹாசன் பேட்டி

மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு, யார் வந்தாலும் அரவணைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதில் திமுகவானது விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் இன்னும் சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது. அதேபோல அதிமுகவானது பாமக, பாஜக மற்றும் சில கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. கமல்ஹாசன் தலைமையிலான 3வது கட்சி சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகேவுடன் கேட்டு தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே கட்சி தலைவர் ரவிபச்சமுத்து ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணி மாற்றத்திற்காகவும், மக்களுக்காகவும் உருவான கூட்டணி எனக்கூறிய அவர்கள், இந்த கூட்டணியின் பெயர், முதல் கூட்டணி என்றும் அறிவித்தனர். தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தத்தில் மூவரும் கையெழுத்திட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்தாலும் குறை கூறுகிறீர்கள் – வைக்காவிட்டாலும் குறை கூறுகிறீர்கள் என தெரிவித்தார்.

Advertisement:

Related posts

கி.ரா மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

23 மணி நேர பயணம்: சென்னை வந்தார் சசிகலா

Nandhakumar

சுழற்சி முறை பணியை அமல்படுத்த வேண்டும்: தலைமைச் செயலக ஊழியர் சங்கம்

Ezhilarasan