முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுவையில் தனித்து போட்டியிடும் பாமக!

புதுச்சேரியில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாக நடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பெரிய கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதிப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை எதிர்கொள்கின்றது. ஆனால், புதுவையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவிற்கு உரிய பிரதிநிதித்துவம், உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் புதுவையில் 12 தொகுதிகளிலும், காரைக்காலில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என பாமக செயற்குழு ஒரு மனதாக தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக இன்று அறிவித்திருந்த நிலையில், பாமகவின் இந்த நிலைப்பாடு அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

திருவண்ணாமலை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது!

Niruban Chakkaaravarthi

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

Jeba

பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில்!

Saravana