மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வணிகவரித்துறை மற்றும் பத்திர துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா, நீதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மூர்த்தி பேசுகையில், “மதுரையில் எத்தனை தொகுதி இருந்தாலும் மேலூர் பகுதியில் திமுக 90சதவீதம் வெற்றி பெறும்.
எந்த கூட்டணி வந்தாலும் எதிரியை விட நாம் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேலூர் பொதுமக்கள் மத்தியில் திமுக அதிமாக ஓட்டு வாங்கும் முயற்சியிலும், மேலூர் பகுதியில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.







