ஆனால், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலக மறுத்தார்.இதனால் அந்நாட்டு இளைஞர்கள் அதிபர் மாளிகையின் முன்பு போராட்டங்கள் நடத்தி அங்கேயே கூடாரம் போட்டுத் தங்கினர்.இந்நிலையில் கோத்தபய ராஜபக்ஷே பதவியிலிருந்து விலகி புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.
பதவி ஏற்ற மறுநாளே காலி முகத்திடலில் இருந்த போராட்டக்காரர்களின் கூடாரங்களை காவல்துறை அகற்றியதால் அங்கு மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்கே கேட்டுக் கொண்டார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் இருந்தனர். இதனையடுத்து இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதாகப் போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
அத்துடன் போராட்ட களத்திலிருந்து வெளியேறினாலும் எங்கள் போராட்டம் தொடரும் எனக் கூறினர். நாங்கள் பாதி வெற்றியைக் கண்டுவிட்டோம், இன்னும் பல வெற்றிகளைக் காணவேண்டியுள்ளது எனவும், குறிப்பிட்டுள்ளார். மேலும், தயவு செய்து அவசரக் கால சட்டத்தை நீக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்களைக் கைது செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.








