Monday blues-ஐ எதிர்கொள்ளும் வழிமுறைகள்!

வேலை செல்பவர்களாக இருந்தாலும் சரி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களாக இருந்தாலும் சரி, வார இறுதி விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் திங்கள்கிழமை அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கோ செல்ல வேண்டும் என்றால் ஒருவித பதற்றம்,…

வேலை செல்பவர்களாக இருந்தாலும் சரி, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களாக இருந்தாலும் சரி, வார இறுதி விடுமுறை நாட்கள் முடிந்து மீண்டும் திங்கள்கிழமை அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கோ செல்ல வேண்டும் என்றால் ஒருவித பதற்றம், சோர்வு, சோகம் போன்ற உணர்வுகள் பலருக்கும் ஏற்படும்.அவ்வாறு, ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் உங்களுக்கு பதட்டம், சோகம் அல்லது பதற்றம் போன்ற தீவிர உணர்வுகள் உள்ளதா? திங்கட்கிழமைகளில் நீங்கள் சோர்ந்து காணப்படுகிறீர்களா? அப்படி காணப்பட்டால் நீங்கள் ‘திங்கட்கிழமை ப்ளூஸ்’ (Monday blues) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். இந்த மனநிலையை எதிர்த்து போராட உதவும் 5 குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. சரியான நேரத்தில் வேலையை முடிக்க வேண்டும்

திங்கட்கிழமைக்கான வேலையை குறைக்க அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் வெள்ளிக்கிழமை நீங்கள் என்ன முடிக்க முடியும் என்பதைக் கவனித்து, அந்த வேலையை வாரயிறுதி முடிவதற்குள் செய்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

2. நல்ல தூக்கம்

உற்சாகமாக வேலை செய்ய வேண்டுமென்றால், நமது உடலுக்கு போதுமான அளவு ஓய்வு அவசியம். எனவே வார இறுதி விடுமுறை நாட்களில் இரவு நன்கு தூங்க வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு நன்றாக தூங்கி எழும் போது காலையில் சுறுசுறுப்பாகவும், புத்துணர்வுடனும் இருக்க முடியும்.

3. கூட்டங்களை தவிர்க்கவும்

பொதுவாக வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று காலையில் அலுவலக கூட்டங்களை ( meetings) நடத்த திட்டமிடுவதை தவிர்க்க வேண்டும்.

4. நண்பர்களை சந்தித்தல்

திங்கட்கிழமை மாலை நேரத்தில் உடன் பணிபுரியும் சக ஊழியர்கள் அல்லது நெருக்கமான நண்பர்களுடன் வெளியில் சந்திக்க திட்டமிடுவது திங்கட்கிழமை ப்ளூவை எதிர்த்து போராட உதவும். அப்போது பணிச்சுமை பற்றி விவாதிக்கவும், மனசு விட்டு பேசவும் நல்ல ஒரு சூழல் ஏற்படும். மேலும் சகஊழிர்கள் சந்தித்து பேசும் போது வேலையை எவ்வாறு திட்டமிட்டு செய்வது போன்ற கலந்துரையாடல்கள் மூலம் பணிச்சுமையை குறைக்க முடியும்.

5. உடற்பயிற்சி

காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி செய்து அந்த நாளின் தொடக்கத்திற்கு நல்ல ஒரு விஷயமாக இருக்கும். காலையில் யோகா, நடைப்பயிற்சி, ஜிம் ஒர்க் அவுட் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை செய்வதால் மனமும், உடலும் உற்சாகமடையும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரந்து அந்த நாளை உற்சாகமாக மாற்றும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.