வயநாடு நிலச்சரிவு – DYFI நிவாரணப் பணியில் நடிகை நிகிலா விமல்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் நடிகை நிகிலா விமல் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள்…

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் பணியில் நடிகை நிகிலா விமல் ஈடுபட்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலச்சரிவில் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட இடங்கள் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாதது போல் காட்சியளிக்கின்றன. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர்  மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், பல தன்னார்வ அமைப்புகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை விநியோகித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நிகிலா விமல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.