வாட்ஸ் அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையை மக்கள் ஏற்க வரும் மே 15ஆம் தேதிதான் கடைசிநாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல வாட்ஸ் அப் செயலியை உலகளவில் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வாட்ஸ் அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கை அறிமுகப்படுப்பட்டது.
அந்தவகையில் பயனாளர்களின் தரவுகளை வாட்ஸ் அப் செயலியை விலைக்கு வாங்கிய ஃபேஸ்புக்கிடம் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய தனியுரிமை கொள்கையை பயனாளர்கள் ஏற்க கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வரை கால அவகாசமும் வழங்கப்பட்டது.
பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் தரவுகளை திருடுவதாகக் கூறி அந்நிறுவனம் மீது குற்றம்சாட்டியதால், வாட்ஸ் அப் முன்பு குறிப்பிட்ட பிப்ரவரி 8ஆம் தேதியில் புதிய கொள்கையை அமல்படுத்தவில்லை. இந்நிலையில் வரும் மே மாதம் 15ஆம் தேதி புதிய தனியுரிமை கொள்கை கொண்டுவரப்படும் என வாட்ஸ் அப் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மக்கள் ஒருவேளை 15ஆம் தேதிக்கு பின்பும் புதிய தனியுரிமை கொள்கையை ஏற்க மறுத்தால், குறைந்த காலம்வரை அவர்களால் வாட்ஸ் அப்பின் நோட்டிஃபிகேஷன்கள் மற்றும் அழைப்புகளை ஏற்க முடியும் ஆனால் மெசேஜ்களை அனுப்பவோ படிக்கவே முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் வாட்ஸ் அப், சாட் விண்டோவின் மேல் ஒரு சின்ன விழிப்புணர்வு பேனர் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது. அதன் மூலம் மக்களின் எந்தெந்த தரவுகள் எடுக்கப்படும் உள்ளிட்ட தகவல்களை பயனர்களிடம் தெளிவுப்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது.







