கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்த வரை தண்ணீர் முறையாக திறந்து விடப்பட்டது… அண்ணாமலை பேச்சு..!

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்னை ஏற்பட்டதில்லை என, அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திதையின் 15 வது நாளாக ஸ்ரீவைகுண்டம்…

கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது தண்ணீர் திறந்து விடுவதில் பிரச்னை ஏற்பட்டதில்லை என, அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திதையின் 15 வது நாளாக ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகரியில் காமராஜர் திரு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து ஆழ்வார்திருநகரில் உடையவர் (ராமானுஜர்) சன்னதியில் ரெங்கராமானுஜ ஜீயர் சுவாமிகளை சந்தித்து அண்ணாமலை ஆசிர்வாதம் பெற்றார்.

பின்னர் ஆழ்வார்தினரியில் நடை பயணத்தை துவக்கிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதிநாத புரத்தில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். அருகிலுள்ள சமத்துவ புறத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதை கண்ட அண்ணாமலை அங்கு சென்று கிரிக்கெட் விளையாடினார்.

இதைத் தொடர்ந்து புது குடியில் பாஜகவினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஶ்ரீவைகுண்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், செந்தில் பாலாஜி பார்வெல் லைசன்ஸ் இல்லாமல் இரண்டு ஆண்டுகளில் 96 ஆயிரம் கோடி சம்பாதித்து புழல் சிறையில் உள்ளார். இந்திக்காரர்கள் இந்தியில் யாரேனும் லெட்டர் எழுதினால் எனக்கு இந்தி படிக்க தெரியாது. நைனார் அண்ணனுக்கு இந்தி படிக்க தெரியாது.

ஆனால் கனிமொழி எம்.பி. இந்தியை திணித்து விட்டார்கள் என தெரிவிப்பார். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது காவிரியில் தண்ணீர் பிரச்னை இருந்ததில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சி முதல்வராக இருக்கும்போது திமுக கூட்டணி கட்சி ஆக இருந்தும் தண்ணீர் பெற முடியவில்லை. இவ்வாறு பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.