“தேவராவில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங்கை பார்க்க ஆசை” – #KoratalaSiva

தேவரா இரண்டாம் பாகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால், நன்றாக இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் கொரடால சிவா தெரிவித்துள்ளார். ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்த 27ஆம்…

“Want to see Ranbir Kapoor or Ranveer Singh in Devara” - #KoratalaSiva

தேவரா இரண்டாம் பாகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால், நன்றாக இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் கொரடால சிவா தெரிவித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் உருவான தேவரா திரைப்படம் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஜூனியர் என்டிஆரின் 30வது திரைப்படமாகும். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அனிரூத்தின் இசையில் உருவான பாடல்களே. இருப்பினும் படக்குழு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இப்படத்தின் இயக்குநர் கொரடால சிவா பேசியதாவது;

“தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் யாரையும் நடிக்க வைக்க திட்டமில்லை. மாறாக, சில முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது. இது நடக்குமா, நடக்காதா என எனக்கு தெரியவில்லை. தேவாராவின் உலகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால் நன்றாக இருக்கும். விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும். இரண்டாம் பாகத்தின் 20 நாள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.