முக்கியச் செய்திகள் இந்தியா

“ராணுவத்திற்கு உற்சாகமும், உணர்வு மிகுதியும் தேவை” – லெப்டினன்ட் ஜெனரல்

உற்சாகமும், உணர்வு மிகுதியும் ராணுவத்திற்கு தேவைப்படுகிறது என லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி வலியுறுத்தியுள்ளார்.

17.5 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம் என பாதுகாப்புத்துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இவர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் இந்த திட்டத்திற்கு அக்னிபாத் (அக்னிபாதை) என்றும் பெயரிடப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆனால் இவர்களில் 75 சதவிகிதமானோர் 4 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. ரயில்கள் எரிக்கப்பட்டன. தெலங்கானாவில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பதட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்தார். சூழல் இவ்வாறு இருக்க, அக்னிபாத் திட்டம் தேசத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடற்படை தளபதி ஹரி குமார் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விளக்கமளிக்க முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய 1990 கார்கில் போர் கமிட்டியின் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, ராணுவத்தில் வீரர்களின் சாரசரி வயது 30ஆக இருப்பதால் உற்சாகமும், உணர்வு மிகுதியும் ராணுவத்திற்கு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“மேகதாது அணைக்கு எதிர்ப்பு வேண்டாம்”- தமிழக முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்

Halley Karthik

நூல் விலை கிலோவுக்கு ரூ.40 உயர்வு; தொழில்துறையினர் அதிர்ச்சி

Arivazhagan CM

ஒலிம்பிக்; ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய ஹாக்கி அணி

Saravana Kumar