முக்கியச் செய்திகள் இந்தியா

“அமைதியாக போராடுங்க…ஆனால் போராட்டத்தை கைவிடாதீங்க…”-ப்ரியங்கா காந்தி

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் அமைதியாக போராட வேண்டும் என்றும் ஆனால் போராட்டத்தைக் கைவிடக் கூடாது என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி கூறியுள்ளார்.

அக்னிபாத் திட்டத்தின் அடிப்படையில் ராணுவத்திற்கு இளைஞர்களை சேர்ப்பதை கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. போராட்டங்களின் போது கடுமையான வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று சத்யாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோரும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பிக்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்,

போராட்டத்தில் பேசிய ப்ரியங்கா காந்தி, அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொல்லும் என்றும் நாட்டின் ராணுவத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்றும் விமர்சித்தார். இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததற்கான உள்நோக்கத்தை புரிந்துகொண்டு அந்த உள்நோக்கத்தை வீழ்த்த வேண்டும் என ப்ரியங்கா காந்தி கேட்டுக்கொண்டார். நாட்டிற்கு உண்மையாக இருக்கும் ஆட்சியை கொண்டு வந்து நாட்டின் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இளைஞர்கள் அமைதியான வழியில் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ப்ரியங்கா காந்தி, அதே நேரம் போராட்டத்தை கைவிடக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார். இளைஞர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முழுமையான ஆதரவு உண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி உறுதியளித்தார்.

 

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

Vandhana

நடிகராக மாறிய இயக்குனர்கள் சினிமாவில் தங்களை நிலைநிறுத்திக்கொண்டார்களா ?

Ezhilarasan

காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டு கிணற்றில் விழுந்த இளைஞர்

Saravana Kumar