வியாசர்பாடி தீவிபத்து – பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறிய KPY பாலா!

வியாசர்பாடி பகுதியில் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் டிவி புகழ் பாலா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் கடந்த மே.26ம் தேதி குடிசை வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்து, அருகில் உள்ள குடிசைகளிலும் தீ பரவத் தொடங்கி விபத்துக்குள்ளானது. இதனை அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 24 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விஜய் டிவி பாலா, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 5000 ரூபாய் நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.