லஞ்சம் இல்லாத ஆட்சி அமைய அமமுகவிற்கு வாய்ப்பளிக்க கோரும் டிடிவி தினகரன்

தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் இல்லாத நல்லாட்சி அமைய அமமுக – தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை…

தமிழகத்தில் லஞ்ச, லாவண்யம் இல்லாத நல்லாட்சி அமைய அமமுக – தேமுதிக கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடலூர் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஞானபண்டிதனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இயற்கை பேரிடரால் ஆண்டுதோறும் பாதிக்கப்படும் மாவட்டமாக கடலூர் இருப்பதாகவும், இதிலிருந்து மக்களை பாதுகாக்க எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடந்த கால அரசுகள் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் தீயசக்திகள், துரோகிகள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தற்போது தேர்தலில் களம் காண்பதாக விமர்சித்த டிடிவி தினகரன், தமிழகத்தில் லஞ்சம் லாவண்யம் இல்லாத நல்லதொரு ஆட்சி அமைய அமமுக – தேமுதிக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.