ஒலிம்பியாவின் தொல்பொருள் தளத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான வெண்கல காளை சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பியாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, தற்செயலாக அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் வெண்கலத்தினாலான சிறிய காளை சிலை ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அந்த சிலை கிரேக்க பண்டைய கடவுளான ஜீயஸின் கோவிலுக்கு அருகில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, காலை சிலையை ஆய்வகத்திற்கு கொண்டு சென்று பாதுகாத்து வருவதாக கூறினர்.

கி.மு 1050 – 700 காலகட்டத்தில் ஜீயஸின் கடவுளுக்கு வழங்கப்பட்ட பரிசுகளில் இதுவும் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பண்டைய காலத்தில் குதிரைகளும், காளைகளும் கிரேக்க மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. எனவே, இந்த சிலை கடவுளுக்கே அர்ப்பணிக்கப்பட்டது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.







