வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஜக்ஜித் என்பவர் 33 ஆண்டுகளுக்குப் பின் தனது தாயை பார்த்த கண்ணீர் விட்டு மகிழ்ந்திருக்கிறார்.
வடமாநிலங்களில் வெளுத்துவாங்கும் மழை காரணமாக டெல்லி, பங்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இந்த மாநிலங்களில் மீட்புப் பணிக்காக பல்வேறு தீயணைப்பு வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப்பணி வீரர்களும், பல தன்னார்வலர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
இதேபோல் ஜக்ஜித் என்பவர் வெள்ள மீட்புப் பணிகளுக்காக பஞ்சாபை சேர்ந்த பாட்டியாலாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் காத்திருந்தது. ஜக்ஜித் ஆறு மாதக் குழந்தையாக இருந்த போது அவரது தந்தை இறந்து விடுகிறார். இதனால் அவரது தாயார் ஹர்ஜித் மறுமணம் செய்து கொள்ள, அவரது தந்தை வழி தாத்தா-பாட்டி ஜக்ஜித்துக்கு 2 வயது இருக்கும் போது தங்களுடன் அழைத்து செல்கிறார்கள்.
அவர் வளரும் போது, அவரது தாய்-தந்தை இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்கள். இந்நிலையில், வளர்ந்து பெரியவனான பிறகு, வெள்ள மீட்புப் பணிக்காக இவர் பாட்டியாலா வந்துள்ளார். கடந்த வாரம் பாட்டியாலா கிராமத்தில் வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஜக்ஜித் சிங், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மூதாதையரின் ஊருக்கு வந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த அவரது உறவினர் ஒருவர், ஜக்ஜித் தாயின் சொந்த ஊர் பாட்டியாலா தான் என்றும், தாய் வழி தாத்தா-பாட்டி இங்கு வசிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். உடனடியாக தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தாத்தா வீட்டை தேடிக் கண்டுபிடித்து அங்கு இருந்த பாட்டியிடம் தனது தாய் குறித்து கேட்டுள்ளார். ஆனால் ஜக்ஜித்க்கு தெரியாது தான் விசாரித்துக்கொண்டிருப்பது தனது தாயிடம் என்று. அவருக்கு, முதல் திருமணத்தின் போது ஒரு ஆண் குழந்தை இருந்ததே அப்போது தான் நினைவுக்கு வந்தது.
அவரது தாய் ஜக்ஜித்திடம் நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு தான் கதறி அழுததாகவும், தன் தாய் உயிருடன் இருந்தும் கூட, அவரை 33 ஆண்டுகளாக பார்க்க முடியாத துரதிருஷ்டசாலியாக இருந்தேனே என்றும் கதறி அழுதுள்ளார் ஜக்ஜித். அவரது குடும்ப புகைப்படம் ஒன்றில், யார் என்று தெரியாமல் ஒரு பெண்ணின் புகைப்படம் இருப்பதையும், அதுதான் தனது தாய் என்பதையும் தற்போது அறிந்து வேதனை அடைந்ததாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வலர் ஜக்ஜித் சிங், தனது வாழ்வில் பல ஆச்சரியங்களை சந்தித்திருப்பார். ஆனால், அன்றைய தினம் அவர் அடைந்த ஆனந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை. ஆனால் இதுபோன்ற ஒரு ஆச்சரியத்தையும், அளவில்லா சந்தோசத்தையும் அவர் சந்தித்திருப்பாரா என்பது சந்தேகமே!







