இந்தோனேசியாவில் நடந்த எரிமலை வெடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் மெராபி என்ற எரிமலை வெடித்து அதிலிருந்து வந்த எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் 1,600 மீட்டர் வரை சரிவுகளின் கீழ் பாய்ந்து வந்துள்ளது. மேலும், அந்த எரிமலையிலிருந்து வந்த எரிமலை குழம்பு 2,986 மீட்டர் பரப்பளவில் வேகமாக பரவி மக்கள் அதிகம் வசிக்கும் இடமான ஜாவா மற்றும் யோககர்த்தா பகுதியை சேதப்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள அடிக்கடி வெடிக்கக் கூடிய எரிமலைகளில் மெராபி எரிமலையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது பலமுறை வெடித்து வாயு மேகங்களை வேகமாக உமிழ்வதால் அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2010ல் நடந்த எரிமலை வெடிப்பு சம்பவத்தில் 347 பேர் உயிரிழந்துள்ளனர்.







