ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தினார் ஜோ பைடன்!

நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டங்களை ஜோ பைடன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த…

நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டங்களை ஜோ பைடன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு நிர்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். வெள்ளை மாளிகையிலும் படிப்படியாக மாற்றங்களை செய்து வருகிறார். மேலும் இதற்கு முன்னர் அதிபராக இருந்த ட்ரம்ப் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது புதிய உத்தரவாக நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் திட்டங்களை ஜோ பைடன் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். இதனை ஆய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply