மீண்டும் த்ரில்லர் ஜானரில் களமிறங்கும் விஷ்ணு விஷால்… வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

‘முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராம்குமார், அதற்கடுத்து ‘ராட்சசன்’ என்கிற படத்தை இயக்கி அனைவராலும் கவனிக்கப்பட்டார். மேலும், இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவரது அடுத்த படம் பற்றிய அப்டேட்டுகள் எதுவும் வராமலே இருந்தது. இந்த சூழலில், மீண்டும் விஷ்ணு விஷாலுடன் இவர் இணையும் புதிய படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது.

அதன்படி, ராம்குமாரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். பிரேமலு படத்தின் மூலம் பரவலாக கவனமீர்த்த மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். சித்தா படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘இரண்டு வானம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. காமெடி, காதல், த்ரில்லர் என 3 ஜானரில் இப்படம் உருவாகி வருவதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.