பருவ நிலை மாற்றத்தால் மா விளைச்சல் பாதிப்பு- விவசாயிகள் வேதனை

விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்,பிளவக்கல்,ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மா,பலா,நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிடப்பட்டு…

விருதுநகர் மாவட்டத்தில் நிலவும் காலநிலை மாற்றத்தால் மா விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர்,பிளவக்கல்,ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மா,பலா,நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிடப்பட்டு வந்தாலும் குறிப்பாக இங்கு விளையும் மாம்பழங்களுக்கென தனி மவுசு எப்போதும் உண்டு. இங்கிருந்துதான் சப்போட்டா,மாம்பழம் உள்ளிட்டவை அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் தற்போதுதான் மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில் திடீரென ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருவதால் மாமரத்தில் பூக்கும் பூக்கள் அனைத்தும் காயாக மாறாமல் கருகிப் போகின்றன.

மேலும் செல்பூச்சி தாக்குதல் காரணமாக தேன் ஒழுகல் நோய் ஏற்பட்டு
காய்க்கும் காய்கள் அனைத்தும் கருப்பாக மாறி பயன்பாடற்ற நிலைக்கு சென்று விடுகின்றன.கடந்த காலங்களில் பூச்சி தாக்குதலை கட்டுபடுத்துவதற்கென பயன்படுத்திய மருந்துகளுக்கும் தற்போது அரசு தடை விதித்துள்ளதால் விவசாயிகள் இயற்கையான முறையில் தாங்களாகவே உரங்களை தயாரித்து பயன்படுத்தினாலும் அவை சரிவர வேலை செய்யாததினால் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் கடுமையான பாதிப்படையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் இந்தாண்டு மட்டும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் 3முதல் 5லட்சம் வரை நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.எனவே அரசு பூச்சி தாகுதலை கட்டுபடுத்த அரசு உரிய மருந்துகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.