தன்னுடைய புதிய செல்போனை தொலைத்து விட்டதாக விராட் கோலி ட்விட்டரில் போட்ட பதிவிற்கு சொமேட்டோ நிறுவனம் அளித்த பதில் வைரலாகி வருகிறது.
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், இருப்பதிலேயே மிகவும் மோசமான விஷயம் என்றால் பெட்டியைத் திறந்து பிரித்துக் கூட பார்க்காத புது செல்போனை தொலைப்பது தான். யாராவது அதைப் பார்த்தீர்களா என்று பதிவிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
Nothing beats the sad feeling of losing your new phone without even unboxing it ☹️ Has anyone seen it?
— Virat Kohli (@imVkohli) February 7, 2023
இதையடுத்து, சோகத்தில் இருக்கும் விராட் கோலிக்கு ஆறுதல் தெரிவித்து அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், சொமேட்டோ நிறுவனம் கோலியின் ட்வீட்டுக்கு அளித்திருந்த பதில் ஒன்று தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் பதிவில், கவலை வேண்டாம் கோலி, ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்து அனுஷ்காவுடன் சேர்ந்து சாப்பிடுங்கள் எல்லாம் கூலாகிவிடும் எனத் தெரிவித்திருந்தது.
feel free to order ice cream from bhabhi's phone if that will help 😇
— zomato (@zomato) February 7, 2023
சொமேட்டோவின் இந்த ட்வீட்டை பலரும் விமர்சித்து வரும் நிலையில், இது ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-ம.பவித்ரா