மனைவியுடன் நடனமாடி புத்தாண்டை வரவேற்ற தோனி… வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் பிரபலம் எம்.எஸ்.தோனி தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் நடனமாடி, புத்தாண்டை கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் வீரருமான மகேந்திர சிங் தோனி,…

VIRAL VIDEO: Cricketer MS Dhoni dances with wife Sakshi at a New Year's Eve party in Goa.

கிரிக்கெட் பிரபலம் எம்.எஸ்.தோனி தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் நடனமாடி, புத்தாண்டை கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் வீரருமான மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்ஷி தோனியுடன் புத்தாண்டை வரவேற்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பாரம்பரிய நடனம், புதிய ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இரவு வானில் ஒரு சீன விளக்கு என கோலகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்றுள்ள தோனி 42 வயதிலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இந்தாண்டு தோனியின் ஐபிஎஸ் ஆட்டத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். 2025க்கான ஐபிஎல் ஏலம் முடிவடைந்துள்ள நிலையில், இந்தாண்டு மார்ச் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. தோனி தலைமையில் 5 கோப்பைகளை வென்றுள்ள சிஎஸ்கே அணி, தற்போது இந்த ஆண்டு கோப்பை வெல்லுமா? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.