இணையத்தை கலக்கும் வைரல் போஸ்ட்…. பார்பி உலகில் இந்திய அரசியல்வாதிகள் இப்படித்தான் இருப்பார்களோ!!!

பார்பி உலகில் இந்திய அரசியல்வாதிகள் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை பதிவு இணையத்தை கலக்கி வருகிறது.  இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா…

பார்பி உலகில் இந்திய அரசியல்வாதிகள் எப்படி இருப்பார்கள் என்ற கற்பனை பதிவு இணையத்தை கலக்கி வருகிறது. 

இயக்குநர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா மேக்கி, சிமு லியு, மைக்கேல் செரா, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் பார்பி.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு அனிமேஷன் படங்களுக்குப் பிறகு இறுதியாக இப்படம் மனிதர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது. இப்படம் பார்பிக்களின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வரும் நிலையில் புகைப்பட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பார்பி பிங்க் பிரசாரம் நடந்து வருகிறது. @ideai என்ற Insta பயனர் இந்திய அரசியல்வாதிகளின் சில AI படங்களை பகிர்ந்துள்ளார். இந்த படங்களைப் பகிர்ந்து, பயனர் பார்பி உலகில் இந்திய அரசியல்வாதி என்று எழுதினார். இந்த பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.