கம்போடியாவின் நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹுன் சென், மூன்று வாரங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், தனது மூத்த மகனிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகவும் புதன்கிழமை தெரிவித்தார்.
தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சியும் தேர்தலில் கலந்து கொண்டது.
தேர்தல் முடிவுகள் அதற்கு சாதகமான நிலையிலே வந்தது. 125 இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 இடங்களை பிடித்து கம்போடியா மக்கள் கட்சி ஆபார வெற்றி பெற்றது. 96 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெற்றுள்ளது.
ஹுன் சென் கடந்த 38 ஆண்டுகளாக நாட்டை வழிநடத்தி வருகிறார். இத்தனை ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்துவிட்டு, தற்போது தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார். ஹுசைன் ஏற்கனவே தனது மகன் ஹன் மானெட்டிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். பதவியில் இருந்து விலகினாலும், கம்போடியா அரசில் அவரது ஆதிக்கம் தொடர்ந்து இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.







