#Viral: 25 கிலோ தங்க நகைகளோடு திருப்பதியில் வலம் வந்த குடும்பம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 25 கிலோ தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்த குடும்பத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில்…

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 25 கிலோ தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்த குடும்பத்தின் வீடியோ வைரலாகி வருகிறது. 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் புனேவைச் சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தது சக பக்தர்களிடமும், இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது. காரணம் அவர்கள் 25 கிலோ தங்கத்தை அணிந்துகொண்டு கோயிலை வலம் வந்துள்ளனர்.

ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் தங்கம் உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அந்த ஆண்கள் இருவரும் தங்களது கழுத்து நிறைய தங்கச் சங்கிலிகளை அணிந்திருந்தனர். உடன் வந்திருந்த பெண்ணும் தங்க ஆபரண நகைகளை அணிந்திருந்தார். கழுத்து மட்டுமின்றி, கைகளிலும் அந்த ஆண்கள் இருவரும் நகை அணிந்திருந்தனர். இவர்களை அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

மேலும், திருப்பதிக்கு விநோதமாக சாமி கும்பிட வந்திருந்த இவர்களை அங்கு வந்த சக பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.