வைரலான வைர மோதிரம்….? உண்மையை கூறிய தமன்னா… அதிர்ச்சியில் ரசிகர்கள்….

வைரலாக பரவிய புகைப்படத்தில் இருந்த வைரத்தின் பின்னணி குறித்து நடிகை தமன்னா தெளிவுபடுத்தியுள்ளார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில்…

வைரலாக பரவிய புகைப்படத்தில் இருந்த வைரத்தின் பின்னணி குறித்து நடிகை தமன்னா தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள தமன்னா தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி இவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

நடிகை தமன்னா, பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது. இருவரும் கோவாவில் நடந்த இந்த ஆண்டு புத்தாண்டு விருந்தில் கலந்துகொண்ட வீடியோ இணைய தளத்தில் வைரலானது. மேலும் மும்பையில் அடிக்கடி ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. இதையடுத்து அன்மையில் விஜய்வர்மாவை காதலிப்பது உண்மை என்று தமன்னா உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் நடிகை தமன்னா கையில் மிகப்பெரிய வைர மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. ஒரு தரப்பினர், இந்த மோதிரத்தை தமன்னாவின் காதலர் விஜய் வர்மா பரிசளித்திருப்பார் என கூறி வந்தனர். மற்றொரு தரப்போ ராம் சரன் மனைவிதான் இதை வருக்கு பரிசளித்துள்ளார். உபாசனாவுக்கு தான் எவ்வளவு பெரிய மனசு. ரூ. 2 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தை பரிசாக கொடுத்திருக்கிறாரே என ரசிகர்கள் வியந்து பேசினார்கள். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் தீயாக பரவவே  தமன்னா, இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளார். மேலும், “இது வெறும் ‘பாட்டில் ஓபனர்’தான், வைரம் இல்லை” என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.