பதிவு திருமணத்தில் அடிதடி சண்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்கரை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பதிவு திருமணம் செய்ய வந்த மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது. இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை அடுத்த சந்தை கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த சத்தியவாணி என்ற பெண் ஏகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதத்திற்கு முன் கார்த்தி பெண்ணை கடத்தி சென்றதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடந்தி அனுப்பிவைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, உறவினர்கள் ஒன்றுகூடி கோவிலில் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

அண்மைச் செய்தி: ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு’

இந்நிலையில், திருமணத்தை நேற்று பதிவு செய்வதற்காக பெண் வீட்டார் மற்றும் மணமகன் வீட்டார் இணைந்து ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளனர். இந்த நிலையில் மணமகன் சாட்சி கையொப்பமிட மாமனாரை அழைக்கும்போது அவர் வரமறுத்துள்ளார். அப்போது, மணமகன் ஆவேசமாகவும், ஆபாசமாகவும் மாமனாரை பேசியதால் ஆத்திரம் அடைந்த மாமனார் மணப் பெண்ணை வெளியே அழைத்து சென்று வீட்டிற்கு செல்லலாம் என கூறியுள்ளார்.

இதனால், மணமகன் வீட்டார் சண்டையில் ஈடுபட்டதால் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து தாக்கியுள்ளனர். அதன்பிறகு அவர்களுக்குள்ளாகவே பேசி சமாதானம் செய்து, மணமகனை மாமனார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். அதன்பிறகே பதிவு திருமணம் நடந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.