உண்மையிலேயே “லைப் டைம் செட்டில்மெண்ட்” வசூல் அள்ளிய விக்ரம்!

விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜும் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி…

விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜும் மாதம் 3ஆம் தேதி உலகம் முழுவதும் 5,000 திரையரங்குகளுக்கும் மேல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.

இதுவரை தமிழ் திரைத்துறையின் வசூல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்து கமலுக்கு தமிழ் திரையுலகிற்கு கம் பேக் கொடுத்தார். மேலும் படம் வெளியாகிய அடுத்த மாதமே ஓடிடியில் இப்படம் வெளியாகினாலும், இன்னும் பல திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் திரையரங்கத்தில் வெளியாகி நேற்றோடு 75 நாட்கள் ஆகிய நிலையில் படக்குழு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

விக்ரம் படத்தில் லோகேஷ், கைதியின் கதையை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்த்ததிற்கும் மேல் பல அசத்தலான காட்சிகளை அமைத்துத் திரை அரங்குகளை அதிரச்செய்தார். மேலும்,“சூரியா” வரும் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது.

75வது நாள் முடிவில் விக்ரம் திரைப்படம் 500 கொடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனே இப்படத்திற்குத் தயாரிப்பாளர் என்பத்தால் அவருக்கு டபுல் ஜாக்பாடாக அமைந்தது. மேலும் அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேலும் தனது தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து படம் தயாரிக்க உள்ளோர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.