ஆரம்பிக்கலாமா…?-ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் விக்ரம்!

கமல்ஹாசன் நடிப்பில் தயாராகிவரும், விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாநகரம், மாஸ்டர், கைதி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் உருவாகியுள்ளது.…

கமல்ஹாசன் நடிப்பில் தயாராகிவரும், விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மாநகரம், மாஸ்டர், கைதி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதனால், இந்தப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிப்பார்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதில், கமல்ஹாசன் கறி விருந்து வைத்துவிட்டு ஆரமிக்கலாங்களா என கேட்டு கோடாரியை வீசும் காட்சி ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக இருந்தது. இந்நிலையில், இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “நானும் உங்கள் முன் சமர்ப்பிக்க ஆவலாய் காத்திருக்கும், ‘விக்ரம்’ உலகின் சிறந்த திரையரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி முதல்” என பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளான இன்று விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ikamalhaasan/status/1503181645440233472

‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியானதை தொடர்ந்து, கமல்ஹாசன் – லோகேஷ் கனகராஜ் காம்போ ஹிட் ஆகுமா? விக்ரம் படத்தின் பகுதி 2 வெளியாகுமா போன்ற கேள்விகளும் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது. பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹசன் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.