இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம். இன்று சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. அண்மையில், படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் மிக பிரம்மாண்டமாக வெளியீடு செய்யப்பட்டது. ட்ரெயிலர் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இன்று படம் வெளியாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள விக்ரம் திரைப்பட வெளியீட்டை ஒட்டி பல்வேறு திரையரங்களிலும் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அண்மைச் செய்தி: ‘நளினி மனுவுக்கு பதிலளிக்க சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’
குறிப்பாக கோயம்பேட்டிலுள்ள திரையரங்கில் நள்ளிரவு முதலே கூடிய ரசிகர்கள், ஆடிப் பாடி, வாண வேடிக்கையுடன் படம் வெளியாவதை கொண்டாடினர். இந்நிலையில், கைதி படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பார்க்குமாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும், 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் படம் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் படம் வெளியாகியுள்ளது. அதேபோல, கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் கட்சியை தொடங்கிய பிறகு வெளியாகும் இரண்டாவது திரைப்படம் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டும் 700 முதல் 750 திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








