விக்ரம் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கமல் நடித்த படங்களிலேயே முதல் நாளில் மிக அதிகமான வசூலை விக்ரம் திரைப்படம் குவித்துள்ளது. சென்னையில் முதல் நாளில் ரூ. 1.70 கோடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ரூ. 40 கோடியும், உலக அளவில் ரூ. 55 கோடியும் வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், விக்ரம் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் மட்டுமே கடந்த நிலையில் உலக அளவில் முதல் மற்றும் இரண்டு நாட்கள் சேர்த்து 100 கோடி வசூல் செய்துள்ளது. அடுத்த சில வாரங்களில் மிக அதிமாக வசூலை விக்ரம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022இல் வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் பட்டியலில் விக்ரம் 3ஆவது இடத்தில் உள்ளது.
-ம.பவித்ரா








