மாமல்லபுரம் – எண்ணூர் துறைமுகம் சுற்று வட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை 133 கி.மீ. தொலைவுக்கு ரூ.12,301 கோடியில் 6 வழி சுற்றுவட்டச் சாலை அமைக்கப்படவுள்ளது. எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்க பெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் வரை 6 வழிச் சாலை அமைக்கப்படவுள்ளது.
இதற்காக ஈர நிலங்கள், தரிசு நிலங்கள் 6 வழிச் சாலை பணிக்காக கையகப்படுத்தப்படுகின்றன. நிலம் கையகப்படுத்தப்படுவதால், ஆட்சேபனைகள் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு தொடர்பு உடையவர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்தும், கருணாநிதி சாலை வழியாகவும் வரும் கன ரக வாகனங்கள் சென்னைக்கு வராமல் நேரடியாக எண்ணூர் துறைமுகம் சென்றடையும் வகையில் 6 வழிச்சாலை அமையவுள்ளது.
-ம.பவித்ரா








