30 நாளில் விக்ரம் வசூல் எவ்வளவு தெரியுமா?

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் ஒரு மாத வசூல் எவ்வளவு தெரியுமா?  4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜீன் 3 ஆம்…

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் ஒரு மாத வசூல் எவ்வளவு தெரியுமா? 

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜீன் 3 ஆம் தேதி திரையரங்கில் வெளியான படம் விக்ரம். விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியில் விக்ரம் திரைப்படம் வெளியானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. அதே நேரத்தில் விக்ரம் படத்திற்காக கமல்ஹாசன் செய்த புரோமோஷன் பணிகள் என்பது அவ்வளவு எளிதானதல்ல. உள்ளூர் தொலைக்காட்சிகள் முதல் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா வரை விக்ரம் திரைப்படத்தை கமல்ஹாசன் கொண்டு சென்றார்.

இயக்குனர் லோகேஷ் ஒரு பேட்டியில் பேசும் போது நான் ஒரு சேனலுக்கு சென்று பேட்டி கொடுத்துவிட்டு வருவதற்குள் கமல் சார் இன்னொரு மாநிலத்தில் புரோமோஷன் பணிகளுக்காக சென்றிருப்பார் என்றார். அப்படி உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படத்தை கொண்டு சேர்க்க கமல் மெனக்கெட்டது சாதாரமானது அல்ல. அந்த மெனக்கெடல் தான் விக்ரம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்துள்ளது.

விக்ரம் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் கமலுக்கும், படகுழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னனி நடிகர் மகேஷ் பாபு விக்ரம் படத்தை பார்த்து படகுழுவை பாராட்டியுள்ளார். அதில் நவீன யுகத்தின் கல்ட் கிளாசிக் திரைப்படம் இது, இயக்குநர் லோகேஷ் கனகராஜை சந்தித்து இந்த படத்தை எப்படி உருவாக்குனீங்கன்னு முழுசா கேட்டுத் தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் கமலுடைய நடிப்பைப் பற்றி பேச எனக்கு நிச்சயம் தகுதி இல்லை என்பது எனக்குத் தெரியும். நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்று சொல்வதில் ரொம்பவே பெருமையடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் திரைப்படம் வெளியாகி 30 நாட்கள் கடந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 180 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையை பொருத்தவரை கடந்த 30 நாட்களில் விக்ரம் திரைப்படம் ரூ. 17 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இன்னும் பல திரையரங்குகளில் விக்ரம் திரைப்படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.