“பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக்கு..ஷேருதான்..”வைரலாகும் நடிகர் விஜய்யின் செல்ஃபி!

G.O.A.T படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில்…

G.O.A.T படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில்  The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 24-ம் தேதி நடைபெற்றது. Greatest Of All Time திரைப்படம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் தொடங்குவதாகவும் அதில் விஜய் அப்பா , மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படம் ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு தென்னாப்பிரிக்கா, பேங்காக் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்பி தற்போது வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.