வெளியானது புளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர்..!

அசோக் செல்வன் , சாந்தனு நடிப்பில் வெளியாக உள்ள புளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்…

அசோக் செல்வன் , சாந்தனு நடிப்பில் வெளியாக உள்ள புளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புளூ ஸ்டார். இதனை நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி தயாரான இப்படத்தின் அறிமுக விடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனின் திருமணத்தை முன்னிட்டு ‘ரயிலின் ஒலிகள்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இப்பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதன் இரண்டாவது பாடலான ‘அரக்கோணம் ஸ்டைல்’ என்கிற பாடலைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கோவிந்த் வசந்தா இசையில் அறிவு பாடிய இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புளூ ஸ்டார் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ட்ரெய்லர் முழுக்க கிரிக்கெட் போட்டிகளை மையமாக கொண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.  சாந்தனு மற்றும் அசோக் செல்வன் கிரிக்கெட்டில் கடுமையாக மோதிக் கொள்ளும் காட்சிகளாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.