வசூலில் மிரட்டும் விஜயின் #GOAT… முதல் நாளே இத்தனை கோடியா?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கோட்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர்…

Vijay's #GOAT threatening to collect... Is the first day collection so many crores?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கோட்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘கோட்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். த.வெ.க. கட்சியைத் தொடங்கிய பிறகு விஜய் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறியதால், அவரது கடைசி திரைப்படத்திற்கு முந்தைய படமாக இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. 

இதன் காரணமாகவே வழக்கத்தை காட்டிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. இந்த நிலையில், இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.