முக்கியச் செய்திகள் தமிழகம்

மருத்துவமனையிலிருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார் விஜய்காந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைக் கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார். கட்சி தொடர்பான பணிகளிலும் அவர் பெரிதாக ஈடுபடுவதில்லை. குடும்பத்தினரே அதைக் கவனித்து வருகின்றனர். விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனை செல்வது வழக்கம். சமீபத்தில் பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: ‘’ரிசிவந்தியம் ஊராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும்’ – நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

இந்நிலையில், நீண்ட வருடங்களாக இருந்த நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் கேப்டன் விஜயகாந்த் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் அவரின் உடல்நிலை அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாகத் தகவால் வெளியானது. இது தொடர்பாக, தேவையின்றி சிலர் வதந்திகளைப் பரப்பி வருவதாகவும், விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், மருத்துவமனையிலிருந்து இன்று மாலை அவர் வீடு திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் 27,254 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ezhilarasan

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு

Halley Karthik

முன் விரோதத்தால் 2 பேரை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்

Saravana Kumar