சர்ச்சையை கிளப்பிய விஜய் போஸ்டர் – முதல்வர் விஜய்யா?

“முதல்வர் விஜய்” என்ற போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது…

எம். கோபி இயக்கத்தில் நடிகர்கள் அப்புக்குட்டி, தினேஷ், தம்பி ராமையா நடிப்பில் உருவான படம் ‘யாதும் அறியான்’. ஹாரர் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் ஆர்வத்தை தூண்டும் விதமாக வசனமும், ஒளிபதிவும் அமைந்துள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ட்ரைலரில்தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டம் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்புஎன்கிற நாளிதழ் போஸ்டர் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டரால் விஜயின் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றாலும், சமூக வலைதள பக்கங்களில் விமர்சனங்களும் எழுந்துள்ளது. ஆக மொத்தம், யாதும் அறியான்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஒற்றை போஸ்டர் கவனம் பெற்றதால் அத்திரைப்படம் குறித்த விவாதத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.