அபிஷன் ஜீவிந்த்தை பாராட்டிய விஜய் தேவரகொண்டா……!

வித் லவ் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அபிஷன் ஜீவிந்த்தை நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடித்து கடந்த 6 ஆம் தேதி வெளியான படம் ’வித் லவ்’. அறிமுக இயக்குநரான மதன் இயக்கியுள்ள இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நகைச்சுவை காதல் படமாக வெளியாகியுள்ள இப்படம் 7 நாட்களில் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வித் லவ் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அபிஷன் ஜீவிந்த்தை நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அபிஷன் ஜீவிந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், “விஜய் தேவரகொண்டா அண்ணாவிடம் இருந்து ‘வித் லவ்’… என்னுடன் நேரம் ஒதுக்கி பேசியதற்காக, அண்ணாவுக்கு நன்றி. இன்று உங்களுடன் உரையாடியது எனக்கு மகிழ்ச்சியைக கொடுத்தது. உங்களுடைய பாராட்டை மகிழ்ச்சியுடனும் உணர்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.