தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் கீத கோவிந்தம் படக்குழுவுடன் மீண்டும் இணைகிறார் விஜய் தேவரகொண்டா.
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் லைகர் என்ற படத்தில் குத்துச்சண்டை வீரராக நடித்தார். விஜய் தேவரகொண்டாவுடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் எதிர்பார்த்த அளவு வசூலை குவிக்காத நிலையில், விஜய் தேவரகொண்டா அடுத்து யாருடன் இணைவர் என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்ததது.
இந்நிலையில், கீத கோவிந்தம்’ படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசு ராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
‘கீத கோவிந்தம்’ படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த படம் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும் என படக்குழு சார்பாகக் கூறப்படுகிறது.
https://twitter.com/DilRajuOfficial/status/1622850452416077824?s=20&t=lmF36_9iTyOklhLZCrvg-g
வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்பட இருக்கிறது.
நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







