விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை 12 மணி நேரம் விசாரணை; காரணம் இதுதான்..

நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் ‘லைகர்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.…

நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் ‘லைகர்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்திருந்தார். ‘லைகர்’ பாக்ஸ் ஆபிஸில் மோசமாக படுத்தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ‘லைகர்’ படத்திற்கு விஜய் தேவரகொண்டா நிதியுதவி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய் தேவரகொண்டா ஹவாலா பணத்தை இந்த படத்தில் முதலீடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரகம் முன்பு விஜய் தேவரகொண்டா ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

விசாரணைக்கு பிறகு செய்தியார்களிடம் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, பிரபலமாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற சவால்கள் வரும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நான் இதை ஒரு அனுபவமாகவே பார்க்கிறேன். அமலாக்கத்துறை அழைத்ததும் நான் என் கடமையை செய்தேன் என்று கூறினார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ‘லைகர்’ படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் தயாரிப்பாளர் சார்மி கவுர் ஆகியோரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.