ஏர்.ஆர்.ரகுமானை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

ஏ.ஆர். ரகுமான் இயக்கிய குறும்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரை பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், பத்து தல, மாமன்னன் திரைப்படம் என…

ஏ.ஆர். ரகுமான் இயக்கிய குறும்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரை
பாராட்டியுள்ளார்.

இந்திய சினிமாவின் பெருமை என போற்றப்படுபவர் இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், பத்து தல, மாமன்னன் திரைப்படம் என பிஸியாக உள்ளார். அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம்
படத்திற்கும் இசை அமைக்கிறார். இவர் கடந்த ஆண்டு வெளியான 99 சாங்ஸ் என்ற
படத்திற்கு கதை எழுதி தயாரித்தும் உள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்ட லீ
மாஸ்க் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ்
திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதனை பார்த்த பலரும் அவரை பாராட்டி உள்ளனர்.

https://twitter.com/arrahman/status/1598013340156329984

இந்நிலையில் இப்படத்தை நேற்று நடிகர் ரஜினிகாந்த் பார்த்து ரசித்துள்ளார்.
இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யார் பார்க்கிறார்கள்‌ என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த
புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.