முக்கியச் செய்திகள் சினிமா

விஜய் சொகுசு கார் வழக்கு: திடீர் திருப்பம்

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்குகோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்தும், தீர்ப்பில் இருந்த தன் மீதான விமர்சனங்களை நீக்கவும் கோரி நடிகர் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார். தனி நீதிபதி தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்ள அனுமதி கேட்ட இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு, நடிகர் விஜய்யின் மனுவை மாற்றுமாறு நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யின் மேல்முறையீடு மனு நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Gayathri Venkatesan

விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: கடும் தண்டனை பெற்று தரப்படும் – முதலமைச்சர்

Arivazhagan CM

’மகன் நினைப்பில் ஷாருக் ஒழுங்கா சாப்பிட்டாரான்னே தெரியல..’ வழக்கறிஞர் பேட்டி

Halley Karthik