விஜய் ஆண்டனி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுளளது.
இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு தமிழரசன் , பிச்சைக்காரன் 2 , கொலை , ரத்தம் , என அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளியாகின. இந்த ஆண்டு ரோமியோ , மழை பிடிக்காத மனிதன் , ஹிட்லர் என இதுவரை மூன்று படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
இதையும் படியுங்கள் : #ChennaiRain | தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1,000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய #DyCM உதயநிதி ஸ்டாலின்!
தற்போது, லியோ ஜான் பால் இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது.இந்த திரைப்படத்தின் கதாநாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் புதிய திரைப்படம் “ககன மார்கன்” எனும் தலைப்பு வைக்கப்பட்டு, புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







