இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி!

இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன்…

இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தன் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் ஆன நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் இவர்களுக்கு பிறந்தது. அடுத்த மாதம் இவர்கள் முதல் பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றனர்.

உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என தங்கள் குழந்தைகளுக்குப் பெயரிட்டுள்ள நயன் – விக்னேஷ் தம்பதி, தொடர்ந்து குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஓணம் பண்டிகையை தனது மகன்களோடு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கொண்டாடி இருக்கின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.